Cargando...

ℹ️ About the book

📝 My Summary

Since I could not figure out the underlying connection between the essays, I would summarise this book as “Random collection of essays by Prabanjan”. There are couple of articles related to the title of the book.

I picked one of his short stories before and this right after. I must say, i prefer to read more of his essays than short stories.

In general, the articles are informative, bit subjective but my favourite articles in this collection are இரண்டு பிரெஞ்சு பெண்கள் & ஒரு அரவாணியின் முதல் நாவல் since they provoked interest to read further on the topic and he does leaves good references to follow up

❝  Few Quotes

அழகு நுணுக்கங்களில் இருக்கிற வஸ்து. அது மேற்பூச்சில் இல்லை. உள்ளார்ந்து கிடப்பதே அழகு. கண்ணுக்கு மை அழகல்ல. கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம். பொருளின் மேற்புறம் அல்ல, அகப்புறம் பார்ப்பதே நுணுக்கம். அது காமத்தைப்போல.
என் விதிக்கப்பட்ட வாழ்க்கை திணித்து வைக்கப்பட்ட ஆயிரம் அனுபவங்களால் ஆன ரகசியப் பெட்டியிலிருந்து சிலவற்றை உருவி என் முன் வீச இருக்கிறது. நிறைய மண்டை ஓடுகள், நிறைய அறுந்த செருப்புகள், நிறைய பழைய கிழிந்த சட்டைகள், நிறைய நடை வண்டிகள், நிறைய மரப்பாச்சி பொம்மைகள், நிறைய காதல் கடிதங்கள், பழிகள், பகைகள், கொலை வெறிகள், கூடிக் குசுகுசுத்துக் குருட்டறையில் இட்ட கருக்கள் என்று நீண்டுகொண்டே போகும் உன்னதமும் சின்னத்தனமும்கொண்ட ஜாபிதாக்களின் கொள்கலன் அந்த ரகசியப் பெட்டி.
விகடனிலிருந்து பிரிந்த கல்கி, தன் சொந்தப் பெயரில் கல்கியைத் தொடங்கி, நாற்பதுகளில் வாசகர் அரங்கத்துக்கு வந்தார். விகடனின் வாசக தொகுதியில் இருந்தே, கல்கி தன் வாசகர்களைப் பிய்த்து எடுத்தார். கல்கிக்கு உருவாகி இருந்த எழுத்தாளர் என்ற புகழ், கல்கிக்குப் பெரிதும் உதவியது. தவிரவும், கல்கியின் சரித்திர நாவல்கள் என்று புனையப்பட்டவை, மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தி, கல்கியை நிலைபெற வைத்தது. மிக முக்கிய அம்சம், இந்த விகடன், கல்கி இரண்டுமே பிராமண ஆசிரியத்துவங்களைப் பெற்றவை.
புகழ் பெற்றவர்களின் அந்தரங்கங்களை எழுதுவதன்மூலம், வாசகர் கற்பனையில் இணைகோடுபோல மற்றுமொரு காம நாடகம் நிகழ்த்தப்பட்டு, அதன்மூலம் வாசகர்களின் ஈர்ப்பையும் ஆதரவையும் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. பாரதியும் பெரியாரும் சுப்ரமண்ய சிவாவும் திரு.வி.க.வும் ஆசிரியர்களாக இருந்து பத்திரிகை நடத்தியது போக, சுதந்திரத்துக்குப் பிறகு, முதலாளிகள் சம்பளத்துக்கு ஆசிரியர்களை அமர்த்திக் கொள்ளூம் நிலை வந்தபிறகு, விற்பனை என்பதே வெற்றி என்றாகியது. ஆசிரியர்கள் விபசாரம் செய்வதில்லை. ஆனால் விபசாரத்துக்குத் துணை செய்யும் செய்திகளைப் போடலாம் என்றாகியது. ஆசிரியர்கள் கொலை செய்வது இல்லை. ஆனால் கொலை, வல்லாங்கு (ரேப்) பற்றி எழுதலாம். இது இன்வெஸ்டிக்கேட்டிவ் ஜர்னலிசம் எனலாம். ஆக, பத்திரிகைகளின் உள்ளடக்கத் தோரணைகள் மாறின.
இந்திய மரபார்ந்த வீடு கட்டுதல், மரச் சாமான்கள் செய்தல் போன்ற பல தொழில் நுட்பங்களின் வடிவங்களை மாற்றியமைத்த பெருமை மேன்ஷன்களுக்குண்டு.
குடும்பப் பரம்பரைக் கதைகள் வெகு சுவாரஸ்யமானவை. அவை புனைவுகளாக இருக்கலாம் என்றாலும் அதில் வரலாறு இல்லாமல் இருப்பதில்லை. இல்லையென்றாலும் கேடு இல்லை.
பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னல் என்று புதுச்சேரியை நேரு குறிப்பிட்டார். பிரஞ்சுக் கலாச்சாரத்தின் மிச்சம் என்று கருதத்தக்க பல அற்புத அம்சங்கள் எங்கள் வாழ்க்கையில் இருந்தன. தமிழ்நாட்டுக்காரர்களின் தொடர் வருகை மற்றும் ஆக்கிரமிப்பால், புதுச்சேரி அதன் மூலமுகத்தை இழந்து போனது.
மாறுபடுகிறவர்களால்தான் உலகம் முன்னோக்கி அடி வைக்கிறது.
ஜப்பானியர்களின் தேநீர் அருந்துவதில் இருக்கும் ஓர்மை மற்றும் ஆன்மீகப் பரவசத்துடன் அருந்த வேண்டிய ஒரு உள்நோக்குப் பயணம் மது. வன்மம், பகை, கோப தாபம், சிறுமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் இடமாக மதுப்பிரதேசம் சீரழிவது, மதுவை அல்ல, அதைக் குடிப்பவரையே நிரூபிக்கிறது.
மகாராசன் தொகுத்த ‘அரவாணிகள்’ என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் ‘ஜனிக்கும்’ அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது.
ராஜஸ்தானத்துப் பாலை அல்ல தமிழ்ப் பாலை. மழை இன்மை காரணமாக நிலம் ஈரம் இழந்து, நன்செய்ப் பயிருக்குத் தகுதி இன்றி வறண்டு போவதையே பாலை என்று சொன்னார்கள். அந்த நிலத்தில் பாலைச் செடிகளும், கள்ளி போன்ற முள் தாவரங்களும் இருந்தன. மழை இல்லாத நிலம், நீர்நிலை இல்லாத சூழல் காரணமாக கடும் வெப்பம் நிலவுகிற பூமியே பாலை. இந்தச் சூழல் உயிர்களை எங்ஙனம் வாட்டுமோ, அங்ஙனமே காதலர்ப் பிரிவும் உள்ளத்துச் சுடும் என்பதால் பிரிவுத் திணையைப் பாலையோடு வைத்தார்கள் இலக்கிய இலக்கணப் புனைவாளர்கள். ஆக, காதலர்களின் பிரிவைப் பாடும் திணையே பாலைத்திணை.
வெந்து தணிந்தது காடு என்கிறார் பாரதி. இங்கு காடு என்றது மரத் தொகுதிகளை அல்ல என்பது முதல் புரிதலாக ஒரு வாசகர்க்கு வாய்த்தால் அவர் கவிதையைத் தொடுகிற, அதன் ஸ்பரிசத்தை உணர்கிற, அதன் மணத்தை நுகர்கிற, அதன் சங்கீதத்தைக் கேட்கிற, மொத்தத்தில் ரசிகராக உருமாற்றம் அடைகிறார்.
நான் படித்தவரைக்கும் வாழ்க்கையை, தனக்களிக்கப்பட்ட வாழ்க்கையை, தனக்கு அனுமதிக்கப்பட்ட சிறு வாழ்க்கையை, தான் பெற்ற உணர்ந்த அனுபவங்களை மிகத் தீவிரமாக எழுத்துக்கு நேர்மையாக இறக்கி வைத்தவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.
‘என் வீட்டுக்கு, நான் அழைக்காமலேயே வந்து புகுந்த தலைவனை முடிந்தால் தலைவிகள் அழைத்துக்கொண்டு போகட்டுமே. கவர்ந்து செல்லப்பட்ட மாட்டு மந்தைகளை மீட்க வீரம் தேவை. தலைவனை மீட்க, அதற்கான காதல் யுக்திகள் தலைவிக்கு ஏது? வந்த விருந்தை, விரும்பி வரவேற்று, அவர் விரும்பி உண்ணும் சிறந்த உணவு வகைகளைச் சமைத்து இடும் நல்ல மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். எங்கள் கலைத் தேர்ச்சியே, தலைவர்கள் இங்கு தங்கிவிடும் காரணம் தலைவிகள் அதை உணரட்டும்... காற்றின் திசைகளில் பரத்தையர் ஏற்றிய கொடி எப்போதும் தாழப் பறப்பதில்லை.

🙏 Thanks to:

என் பரத்தை மனது :)

🐇 Rabbit holes

🔗 Read this book

Back